Thursday, May 5, 2016

2008 (10)


பூமணம் கொண்ட மோளி

பால் மணம் கொண்டாய்

பொங்கிடும் தாய்மையில்

தங்க சேயினை ஈன்றாய் வாழி!


தாய்மை மோளிக்களித்தசாலோ

தகைசான்ற தந்தையானாய்

வானத்து தாரகத்தை நீயும்

வையகத்தே தந்தாய் வாழ்க!


மோளியின் மோகன ராகமிவள்

சாலோவின் சப்தஸ்வரமிவள்

சங்கீதம்போல் இவள் வளர்க

சந்தோசம் அனைவருக்கும் தருக.


மேரிபதியாம் சூசையப்பர் பெருவிழா

தவக்காலத்து விதிவிலக்கு திருவிழா

இவ்வரிய மார்ச் பத்தொன்பதாம் நாள்

இகம் வந்து இன்பம் தந்த திருமகள்!


பங்குனி மாத பாவை இவள்

ஆறாம் தேதி அழகு இவள்

பார் போற்ற சிறக்க

பரமன் உனை காக்க!

- பங்கி

2.       Millennium Child...[2008]
ATHIRA, September 15th 2008
Is your eighth birthday.
That means you are
A millennium girl!
And millennium be
Your achievements!

You do have enough talents
Given by God as is heard
In today’s Gospel parable.
Be creative and enterprising
As the first two servants and
Be rewarded by the Lord.

You are the beauty of
George-Beena family.
You are God’s precious
Gift to them and all of us.

Grow richer in heart and soul
Through your learning from
The school, home and around.
And shine brighter and brighter
With your knowledge and wisdom.

You are a sweet little angel.
Be so always by being a
Joy to all who come across
Your graceful life of worth.
HAPPY BIRTHDAY!
Panky.
Tuesday 19 August 2008

எண்துறையே என்துறையே

எண்ணமெல்லாம் இத்துறையே

எழுச்சிபெறக் காத்திருக்கும்

எழிலான துறையிதுவே.


நீர்நடுவே நிலமிருந்தால்

தீவென்பர் தீந்தமிழில்

நாற்புறமும் நீர்சூழ

தீவாகி நின்றாயே நிறைந்து.


தாய்மொழியாய் தமிழிருக்க

அரசமொழி வேறேனவே

அதைப்படிக்கும் கட்டாயம்

முன்னோர்க்கு நேர்ந்ததுவே.


தாய்மொழியே அரசு மொழியானபின்னும்

ஆண்டவனைப் போற்றுதற்கு

அம்மொழிக்கு இயலவில்லை

அதுவன்றோ நமது நிலை.


நிலமதிலே பிறந்தாலும்

நீர்தானே பிழைப்பெமக்கு

மீன்பிடித்து வாழ்கின்றோம்

மீள இது போதுமென்றோம்.


உலகமயம்வியாபாரம்லாபமென

மீன்தொழிலில் போட்டிவர

தொழில்நுட்ப துணையின்றி

தொலைந்திடுவோம் என்றுணர்ந்தோம்.


தொழில்நுட்ப துணையுடனே

தொலைதூரம் தாண்டிசென்றும்

மீன்வளம் கரைசேர்த்தோம்-நமை

மிஞ்ச இனி எவருண்டு?


உலகமய மேடையிலே முன்னேற

உழைப்புமட்டும் போதாது

உரியகல்வி பெறவேண்டும்

உயரவழி காணவேண்டும்.


காலம் கடந்து மட்டும் கல்விபெற்றோம்

காலம்தாழ்த்தாமல் உயர்ந்துவிட்டோம்

கடல்தாண்டி கண்டங்கள்தாண்டி

'கனவுல'கிலும் வந்துவிட்டோம்!


'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'

வையகம் தொடங்கட்டும் ஊரில் உறவில்

எண்துறையில் எம்துறையில் தொடங்குவோம்

எம்மவரில் நனவாக்குவோம் நம் கனவுகளை.


இதற்கு வடிகாலாக்குவோம் 'எண்துறை'யை

இருள்நீக்கும் விடியலாக்குவோமிதை

கிறிஸ்துமஸ்-புதுவருட பரிசெனவே

நம்மவர்க்களித்திடுவோம் 'எண்துறை'யை.

௨௩.௧௨.௨00


2008Tuesday 3 June 2008

எனது சுவை நீர்
எனது மணமும் நீர்
எனது ஸ்பரிசம் நீர்
எனது இன்பம் நீர்.

எனது உறவு நீர்
எனது உணர்வு நீர்
எனது கனவு நீர்
எனது தெளிவும் நீர்.

எனது சிந்தை நீர்
எனது செயலும் நீரே
எனது வார்த்தை நீர்
எனக்கு வாய்மை நீர்.

எனது ஆசான் நீர்
எழுத்தும் எழுதுகோலும் நீர்
எனது புத்தகம் நீர்
பொருளடக்கமும் நீர்.

எனது காலையும் மாலையும் நீர்
இரவும் பகலும் நீர்
ஞாயிறும் திங்களும் நீர்
வின்மீன்களும் பால்வீதியும் நீர்.

காலங்களும் பருவங்களும் நீர்
மழையும் வெயிலும் நீர்
பனியும் குளிரும் நீர்
குளிரிலும் .....

எனக்கு கடல் நீர்
கரையும் நீர்
மலை நீர்
மடுவும் நீர்.

என் உள்ளமெல்லாம் நீர்
என் எண்ணமெல்லாம் நீர்
உனையன்றி நானில்லை
உனையின்றி நானில்லையே.


அன்புக்கடவுளே எனக்கு எல்லாம் நீரே

எனக்கு தாயும் தந்தையும் நீர்
ஒளியும் வளியும் நீர்
எனைத் தாங்கும் பூமி நீர்
எனைச்சூழும் ஆகாயம் நீர்.

எனக்கு உண்ண உணவு நீர்
உடுக்க உடை நீர்
படுக்க பாய் நீர்
நடக்க பாதை நீர்.

எனை மூடும் போர்வை நீர்
எனை சூழும் நட்பு நீர்
நான் காணும் கட்சி நீர்
நான் கேட்கும் ஒலியும் நீர்.

எனது சொந்தபந்தம் நீர்
ஆசையும் பாசமும் நீர்
எனது நேற்று நீர்
இன்றும் என்றும் நீரே.
வாழ்ந்தபோது
வாழ துணை நின்றீர்
'
வாழ்'விழந்து போகையிலே
வழியனுப்ப வந்துள்ளீர்!

நன்றி சொல்ல வார்த்தையில்லை
நலிவுற்ற இவ்வுடலே நன்றியென
நாளும் ஏற்பீர் நலமுடன் வாழ்வீர்
நினைவாலே நிலைவாழ்வடைவோம். 

2008
Friday 9 May 2008
பகல் முடிந்தும் பாசம் தணியாது
தழைத்தோங்குதிங்கே.
நிழல்கள் தொலைந்தும் நம்பிக்கை குலையாது
பயம்கூட பறந்தோடுதிங்கே.

யாரையும் மறவாத மாதவனே
அன்பின் இதயங்களை ஆட்கொள்க.
துயிலும்போதும் துயிலெழும்போதும்
அருகிருந்து காத்தருள்க.

இருள் சூழ்ந்தாலும் அணையாத தீபமென
இரவிலும் ஜொலித்திடுக.
ஒளியிழந்த கண்களுக்கு ஒளியாக
விழியாக விரைந்து வந்திடுக.

அன்பினில் ஒன்றாகி உண்மைக்கு சான்றாகி
அன்பே இறைவனென்று
அகிலமெலாம் சாற்றிடுக
அவனருள் பெற்றிடுக.
[
கட்டளை ஜெபப்பாடல்கள் தொகுப்பிலிருந்து மொழிபெயர்ப்பு]
சிவமே என்றிருந்தேன்
சக்தியென நீ வந்தாய்
முக்திபெறும் முயறசியெலாம்
யுக்தியிலை என்றுணர்ந்தேன்!
அன்பின் அடையாளமே சிலுவையே
சிலுவைக்கு பொருள் தந்த இயேசுவே
அன்புடன் வாழ அருள் தாரும்.

அனைத்தும் கடனே வாழ்க்கையில்
அம்மா அப்பாவுக்கு
ஆசிரிய பெருந்தகைகளுக்கு
இன்னும் இயற்கைக்கும்
ஈசனுக்கும் கடனே!

உங்களுக்கும் நண்பர்களே
ஊரார் உலகோருக்கும்
எனதென்று ஒன்றுமில்லை
ஏழ்மைதான் மிச்சம்!

ஐய்யமின்றி சொல்வேன்
ஒருவரையும் மறவேன்
ஓதுவேன் உங்களுக்காக
ஔடதமென கடவுள் காக்க.

No comments:

Post a Comment