1. நாற்பது வயதை...[1993]
நாற்பது வயதை கடந்தாச்சு
நடுத்தர வயதை அடைஞ்சாச்சு
நல்லாயன் இயேசு போலின்னும்
நானாகவில்லை நாணுகின்றேன்.
பத்துடன் ஏழும் சேந்தாச்சு
பதினேழு வருடப்பணியாச்சு
பக்குவமடைந்த பாதிரியாக
பலரும் என்னை காணவில்லை!
பாதிரிஎல்லாம் பாராள வேண்டாம்
பங்கையாவது 'ஆண்டிட' வேண்டும்
'பக்குவம்' இதற்கு பலமாக வேண்டும்
பாசாங்கு ஒன்றே பக்குவமாம்.
பாசாங்கு செய்ய நானில்லை
'பக்குவம்' எனக்கும் தேவையில்லை
பரிகாசம் கூட பரவாயில்லை
பணிவுடன் நானும் வாழ்ந்திடுவேன்.
வேறு:
பணமும் பதவியும் அவர்க்கு வேண்டும்
பகிட்டுடன் நாளும் வாழ்ந்திட வேண்டும்
பாதிக்குமேலே பாதிரியார் எல்லாம்
பரவலாக விரும்புவதிதுவே!
படித்தால் மட்டும் போதாது
மேலை நாட்டில் படித்திடவேண்டும்
வெள்ளையர் இறையியல் ஏற்க வேண்டும்
வேறொரு இறையியல் கூடாது!
1993
நடுத்தர வயதை அடைஞ்சாச்சு
நல்லாயன் இயேசு போலின்னும்
நானாகவில்லை நாணுகின்றேன்.
பத்துடன் ஏழும் சேந்தாச்சு
பதினேழு வருடப்பணியாச்சு
பக்குவமடைந்த பாதிரியாக
பலரும் என்னை காணவில்லை!
பாதிரிஎல்லாம் பாராள வேண்டாம்
பங்கையாவது 'ஆண்டிட' வேண்டும்
'பக்குவம்' இதற்கு பலமாக வேண்டும்
பாசாங்கு ஒன்றே பக்குவமாம்.
பாசாங்கு செய்ய நானில்லை
'பக்குவம்' எனக்கும் தேவையில்லை
பரிகாசம் கூட பரவாயில்லை
பணிவுடன் நானும் வாழ்ந்திடுவேன்.
வேறு:
பணமும் பதவியும் அவர்க்கு வேண்டும்
பகிட்டுடன் நாளும் வாழ்ந்திட வேண்டும்
பாதிக்குமேலே பாதிரியார் எல்லாம்
பரவலாக விரும்புவதிதுவே!
படித்தால் மட்டும் போதாது
மேலை நாட்டில் படித்திடவேண்டும்
வெள்ளையர் இறையியல் ஏற்க வேண்டும்
வேறொரு இறையியல் கூடாது!
1993
ஆனந்தில் இறங்கிய அம்மணி உனது
அழகினை ரசித்தேன் அத்தனை நேரமும்
அருகினிலிருந்தாய் அறியாதிருந்தாய்
ஆயினும் உன்னை அகத்தினில் வைத்தேன்.
அன்னையாய் நின்றாய் -இருந்தும்
அழகினால் வென்றாய்
ஆடவன் எனது அகத்தினை நீயும்
ஆட்க்கொண்டு சென்றாய்.
அடிக்கடி அழுதிடும் உன் மழலை
அப்போதெல்லாம் ஆறுதலாக
அன்னையின் தாராட்டறியாதவளாக
அருஞ்சுவைப்பாலையே அளித்துவந்தாய்.
அதிகச்சோர்வு அடைந்தவளாக
அமைதிதோன்ற அயர்ந்தேபோனாய்
அப்படியிருந்தும் அழகிய உன்னை
ஆசைதீர பார்த்து வியந்தேன்.
அழகினை ரசித்தேன் அத்தனை நேரமும்
அருகினிலிருந்தாய் அறியாதிருந்தாய்
ஆயினும் உன்னை அகத்தினில் வைத்தேன்.
அன்னையாய் நின்றாய் -இருந்தும்
அழகினால் வென்றாய்
ஆடவன் எனது அகத்தினை நீயும்
ஆட்க்கொண்டு சென்றாய்.
அடிக்கடி அழுதிடும் உன் மழலை
அப்போதெல்லாம் ஆறுதலாக
அன்னையின் தாராட்டறியாதவளாக
அருஞ்சுவைப்பாலையே அளித்துவந்தாய்.
அதிகச்சோர்வு அடைந்தவளாக
அமைதிதோன்ற அயர்ந்தேபோனாய்
அப்படியிருந்தும் அழகிய உன்னை
ஆசைதீர பார்த்து வியந்தேன்.
3. உறவும் துறவும்...[1993]
உறவுக்காக ஏங்கும் உள்ளம்
துறவை எண்ணி தயங்கும் எண்ணம்
குறையை நினைந்து கலங்கும் நெஞ்சம்
நிறையை நோக்கி நீங்கும் கொஞ்சம்.
பறவைபோல பறந்திட விழையும்
சிறகுகள் இன்றி சீற்றம் கொள்ளும்
பாய்மரம் போல பாய்ந்திட துடிக்கும்
பாய் விரியாது பதட்டம் அடையும்.
இப்படி பலவித மனநிலையோடு
இருக்கும் எனக்கு இன்பம் சேர்க்க
இறைவன் தந்த இளையவள் நீயே
இன்னொரு தங்கை நீயென ஏற்றேன்.
உறவுகள் பலது, ஊடலும் சிலது
உன்னறவதிலே ஊடலும் அரிது
உண்மையை நானே அறிவது எளிது
உலகமோ உன்னை புரிந்துகொள்ளாது.
இருந்தும் என்னை தேற்றிட வந்தாய்
இதயத்தன்மையை இயல்பாய் கண்டாய்
இலகுவாய் நீயே எனையும் வென்றாய்
இயைந்தே உனக்கே பணிந்திட செய்தாய்.
[0௬.௧௧.௧௯௯௧]
துறவை எண்ணி தயங்கும் எண்ணம்
குறையை நினைந்து கலங்கும் நெஞ்சம்
நிறையை நோக்கி நீங்கும் கொஞ்சம்.
பறவைபோல பறந்திட விழையும்
சிறகுகள் இன்றி சீற்றம் கொள்ளும்
பாய்மரம் போல பாய்ந்திட துடிக்கும்
பாய் விரியாது பதட்டம் அடையும்.
இப்படி பலவித மனநிலையோடு
இருக்கும் எனக்கு இன்பம் சேர்க்க
இறைவன் தந்த இளையவள் நீயே
இன்னொரு தங்கை நீயென ஏற்றேன்.
உறவுகள் பலது, ஊடலும் சிலது
உன்னறவதிலே ஊடலும் அரிது
உண்மையை நானே அறிவது எளிது
உலகமோ உன்னை புரிந்துகொள்ளாது.
இருந்தும் என்னை தேற்றிட வந்தாய்
இதயத்தன்மையை இயல்பாய் கண்டாய்
இலகுவாய் நீயே எனையும் வென்றாய்
இயைந்தே உனக்கே பணிந்திட செய்தாய்.
[0௬.௧௧.௧௯௯௧]
'அண்ணா' என்றழைத்த நாவால்...
அடுத்தவர்கள் கேலிசெய்தும்
அன்புடனே அழைத்தாயே
அருமை தங்கை நீயே!
உடன் பிறவாதிருந்தபின்னும்
உரிமையுடன் அண்ணா என்றழைத்தாய்
உன்னை நான் தங்கை என்னும்
உறவுடனே ஏற்றுக்கொண்டேன்.
உயிருள்ளவரை நீயும்
உருக்கமுடன் அண்ணா என
உறுதியாக அழைக்கலாமே
உள்ளத்தை வெல்லலாமே.
[௩0.௧0.௧௯௯௧]
அடுத்தவர்கள் கேலிசெய்தும்
அன்புடனே அழைத்தாயே
அருமை தங்கை நீயே!
உடன் பிறவாதிருந்தபின்னும்
உரிமையுடன் அண்ணா என்றழைத்தாய்
உன்னை நான் தங்கை என்னும்
உறவுடனே ஏற்றுக்கொண்டேன்.
உயிருள்ளவரை நீயும்
உருக்கமுடன் அண்ணா என
உறுதியாக அழைக்கலாமே
உள்ளத்தை வெல்லலாமே.
[௩0.௧0.௧௯௯௧]
No comments:
Post a Comment