Wednesday, May 4, 2016

1980 (11)

சின்னவயதில் ஒரு சின்ன ஆசை
குடும்பம் வேண்டாம் குருவாகவேண்டும்
சின்னவயது சீக்கிரம் முடிந்து
பெரியவனாகி பள்ளிக்கூடம்விட்டேன்
குருமடம் செல்ல குருவிடம் சென்றேன்
சரியென சென்னார் சாமியார் அன்று
அரண்மனை சென்றேன் ஆயரை காண
அவரும் அழைத்தார் அன்புடனேயே
குருமடம் புகுந்தேன் நற்குணம் கற்றேன்
குறைகளை களைந்தேன் குருவாக மாற.
1980

கடலை மட்டும் நம்பி வாழ்ந்தோம்
வாழ்வில் கரை இன்னும் சேரவில்லை.
பள்ளிக்கூடம் போனதில்லை-பட்டம்
பதவிகளும் பெற்றதில்லை.

சேமிப்பு செய்ததில்லை-அதனால்
செல்வங்களும் சேர்ந்ததில்லை.
கல்வியின்றி செல்வமின்றி-நம்மை
யாரும் மதித்ததில்லை இன்றுவரை.

கடமை மட்டும் செய்துவந்தோம்
உரிமைகளை மறந்தேவிட்டோம்
இதுவரைக்கும் தூங்கிவிட்டோம்
விழிதேழுவோம் விழிப்புனர்ச்சியுடன்.

அரசியலும் படித்ததில்லை
அரசாள துணிந்ததில்லை
அடிபணிந்தே வாழ்ந்துவிட்டோம்
அடக்கியாள புறப்படுவோம்.

ஒன்றுபடுவோம் ஒத்துழைப்போம்
ஓரினமாய் நின்று செயல்படுவோம்
ஒருவருக்கும் அடிபணியோம்
ஓங்கி நின்றே வாழ்ந்திடுவோம்.
1980

எனக்கொரு நண்பர் அன்பு செய்பவர்
அவர் பெயரே கிறிஸ்து என்பது.

ஒன்றாக உழைப்போம்
திராட்சை தோட்டத்தில்
இயேசுவின் தோட்டத்தில்.

உனக்கொரு நண்பர் அன்பு செய்பவர்
அவர் பெயரும் இயேசுகிறிஸ்து என்பதே.

ஒன்றாக...

நமக்கொரு நண்பர் அன்பு செய்பவர்
அவர் பெயரும் இயேசுகிறிஸ்துதான்.

ஒன்றாக...

நமக்கொரு அன்னை அன்பு செய்பவள்
அவளே இயேசுவின் தூய அன்னையாம்.

ஒன்றாக....
1980
இதையக்கோவிலில் எழுந்துவா-என்
இதையவீணையை மீட்டவா
இன்னல் அனைத்தும் நீக்கவா
இன்பச்சுடரை ஏற்ற வா.

அமைதி இன்றி அலைகின்றேன்
அழிவை நோக்கி செல்கின்றேன்
அடைக்கலம் ஒன்றே கேட்க்கின்றேன்
அடியேன் எனையே தருகின்றேன்.

ஏழை எனையே ஏற்றிடுவாய்-என்
ஏழ்மைதனையே மாற்றிடுவாய்
ஏற்றம் பெற்றிட செய்திடுவாய் -என்
இயேசுவே எழுந்து வந்திடுவாய்.
1980
ஆனந்தம் பேரானந்தம்
அகமெல்லாம் அருளானந்தம்
இதயத்தில் எழுந்தவர் -என்
இயேசுவாதலால் இவ்வானந்தம்.

தகுதியில்லாத என்னகம் எழுந்து
தந்தார் எனக்கும் ஆனந்தம்
கிடைப்பதர்க்கரிய இவ்வானந்தம்
தந்தவர் அவரை ஆராதிப்போம்.

என்னையே மாற்றி இறைமகனாக்கிட
தன்னையே தந்தார் இறைவனவர்
அவர்பதம் பணிந்து -சரண்
அடைவோமேனில் மீட்படைவோம்.
1980
இசைத்தமிழே உனை புகழ்ந்திடவே
இயற்றிடுவேன் புது கவிதை பல
கவிதைக்கு பண் அமைப்பேன்
அதை தாளமுடன் பாடிடுவேன்.

கேட்பவர்கள் உருகிடவே-அதை
இனிமையுடன் இசைத்திடுவேன்
தமிழிசையின் இயல்பிதென-பிறர்
மொழிந்திடவே வாழ்ந்திடுவேன்.

இயலுடனே இசை வளர்த்த தமிழினமே
இன்றுன் இசைத்தமிழின் நிலை என்ன?
தமிழிசைக்கு குரல் கொடுக்க வேறுபலர்
வந்த நிலை அவல நிலை இல்லையன்றோ?

தொன்மையுள்ள தமிழிசைக்கு
தரணியில் நிகர் எதுவுமில்லை
தன்மானம் குறையாமல்-அது
தழைத்தோங்க பாடுபடு.
1980
ஏற்ப்பாய் இறைவா எனை இன்றே
உம்திரு மகனைப்போல் என்றும்
பலியிடும் குருவும் பலிப்பொருளாகவும்
மாற்றிட... வளர்த்திட...

அப்பரசத்துடன் என் தாய்தந்தை
தம்பிதங்கையையும் அளிக்கின்றேன்
உற்றார் உறவினர் நண்பருடன்
இப்பங்கையும் உமக்களிக்கின்றேன்.

இந்நிலைக்கென்னைசேர்த்திடஉதவிய
அத்தனைபேரையும் நினைக்கின்றேன்
ஆசீர்வதித்து அருட்கொடை வழங்கிட
அனைவருக்காகவும் ஜெபிக்கின்றேன்.
1980
ஒப்புக்கொடுக்கின்றோம் நாங்களொன்றாய்
உம்திரு கொடைகளை விண்ணரசே
சிந்தனை வார்த்தைகள் செயல்களுடன்
உள்ளத்தெழும் உணர்ச்சியையும்.
பீடத்தண்டையில் ஒருமனதோராய்
உன்னேக மகனின் பலியாக்
நாங்கள் காணிக்கையை
மகிழ்வுடனே நீ ஏற்றிடுவாய்

தியாகத்தின் வழியாக நாங்கள் வந்து
பலியிடும் தளத்தில் ஒன்றுசெர்ந்தோம்
சிநேகத்தின்பல்லவி பாடி உன்னோ
டென்றும் இணைந்திட அருள்புரிவாய்.

உடன்பிறப்பில்லாமல் தவித்திருந்தேன்
உதயமானான் தம்பியவன் தனிமைபோக்க
இன்றைக்கு இருபத்திமூன்றண்டு முன்னாலே
இகம்வந்தான் இளையவன் ஜாண்றோஸ்.

பிறந்தநாள் இன்றவன் பிறந்தநாள்
வந்தநாள் புகழ் எமக்கு வந்தநாள்.

அவன் வளர்ந்தான் அறிவும் வளர்த்தான்
ஆற்றலுடன் அடக்கமும் செர்த்தேபெற்றான்
ஊமைத்துரை உற்றார் உறவினர்க்கு
தம்பித்துரை அவன் எனக்கென்றும்.

பொறுமைக்கு பாறையைவிட மேலாவான்
பொங்கியெழ அலைகடலைப்போலாவான்
அடம்பிடிப்பான் அழவேமாட்டான்
அமைதியுடன் தோன்றி நிர்ப்பான்.

தமிழ்க்கலையோடு காதலையும் போற்றிநிர்ப்பான்
தமைக்காத்து நடக்கவேணும் பெண்களென்பான்
தன்மானம் தமிழனுக்கு வேணுமெனபான்-அதை
தன்வாழ்வில் வளர்த்திடவே செயல்படுவான்.
1980
தனிப்பாசம் தருவதர்க்கோர்
தங்கை வேண்டும் என்றிருந்தேன்
பிறந்துவிட்டாள் தங்கையவள்
இருபதாண்டு முன் இதேநாளில்.

சிறந்த நாள் தங்கை பிறந்த நாள்
பறந்து வந்தது அந்த விருந்தநாள்!

மயங்கவைத்தாள் மழலைபேசி
தயங்கவைத்தாள் தமிழ்பேசி
விளங்கசெய்தாள் அன்பதென
வழங்க்செய்தாள் பாசமெல்லாம்.

வளர்ந்தனள் அவள் படர்ந்தனள்
வளர்மதிபோல் வான்முல்லைபோல்
களித்தனர் கண்டுகளித்தனர்-அவள்
அழகினை அனைவரும் கண்டுகளித்தனர்.

வளர்த்துவிட்டாள் என் கர்ப்பனையை
வளமிட்டாள் என் கவிதைக்கு
தூண்டிவிட்டாள் எம் கடமைகளை
துலங்கசெய்வாள் எம் குலப்பெயரை.
1980

அண்ணன் எந்தன் கோயிலிலே
அணையாத தீபம் என் தங்கை
அந்த தீபத்தை ஏற்றிவைப்பேன்
எழிலுடனே விளங்கசெய்வேன்.

எனக்கென்று வாழவில்லை -என்
தங்கைக்காக வாழ்கின்றேன்
அவள் வாழ்வை வளமாக்க
கற்பனையில் மிதக்கின்றேன்.

கர்ப்பனையில் கண்டவைகள்-தங்கைக்கு
காரியமாய் நடக்க வேண்டும்
காலமெல்லாம் அதற்காக
கழிந்தாலும் கவலையில்லை.

வரன் பெற்று வளமும் பெற்று-அவள்
வாழ்வெல்லாம் களிக்க வேண்டும்
மக்கள் பெற்று மனம் நிறைந்து
மகராணியாய் விளங்கவேண்டும்.
1980

No comments:

Post a Comment